ஆரோக்கியமான கிரீமி ப்ரோக்கோலி சூப்

ப்ரோக்கோலி வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதில் வைட்டமின் சி, கே, ஏ, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, எலும்பை வலுப்படுத்துகிறது, செரிமானத்திற்கு நல்லது, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 
     ப்ரோக்கோலி எல்லா வயதினருக்கும் நல்லது. பெரும்பாலும் குழந்தைகள் சூப்பு  வடிவத்தில் ப்ரோக்கோலியை விரும்புவர் . செய்முறைக்கு செல்லலாம்.

                              

தேவையான பொருள்கள் 

ப்ரோக்கோலி -      1 
(நடுத்தர அளவு)

உருளைக்கிழங்கு - 1

வெங்காயம் - 1 (சிறியது)

பூண்டு - 4- 5 பற்கள்

பால் - 1 கோப்பை

உப்பு - சுவைக்கு ஏற்ப

மிளகு - சுவைக்கு ஏற்ப

எண்ணெய் அல்லது வெண்ணெய் - 1 டீஸ்பூன்

துருவிய சீஸ்


செய்முறை

1. சூடான கடாயில், எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒரு நிமிடம் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

2. பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

3. பின்னர் கழுவி நறுக்கப்பட்ட  ப்ரோக்கோலியை ஒரு நிமிடம் வதக்கவும்.

4. பால் சேர்த்து காய்கறிகள் வெகும் வரை நடுத்தர தீயில் கொதிக்க விடவும். (1 கப் பாலிற்கு பதில் 1/2 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் பாலாக மாற்றலாம்).

                               

5. சூடு ஆறியதும் , கொஞ்சம் ப்ரோக்கோலி துண்டுகளை மட்டும் எடுத்து தனியாக வைத்து , மீதம் உள்ளதை மிக்க்ஷியில் மைய அரைக்கவும். 

                                  

                           
                                     

6. அரைத்த கலவையை  ஒரு பாத்திரத்தில் மாற்றவும், மிளகு மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் சூடாக்கவும்.

7. இறுதியாக துருவிய சீஸ் (விரும்பினால்) சேர்த்து சுடரை அணைக்கவும்.

8. மேலே ப்ரோக்கோலி துண்டுகளை சேர்க்கவும்.

9. அற்புதம் மற்றும் ஆரோக்கியமான கிரீமி ப்ரோக்கோலி சூப் சுவைக்க தயாராக உள்ளது.


                                    






Comments